Map Graph

ஸ்ரீபுரம் இலட்சுமி நாராயணன் பொற்கோயில்

வேலூர் உள்ள கோயில்

சிரீபுரம் பொற்கோயில் இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனப்படும் சிரீபுரத்தில் அமைந்துள்ள சிரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இத் திருத்தலம், திருப்பதியிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 145 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் மற்றும் பெங்களூருவிலிருந்து 200 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இக்கோயிலில் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் சிரீலட்சுமி நாராயணிக்கு குடமுழுக்கு வைபவம் 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இங்கு அனைத்து சமயத்தினரும் வருகை புரிகின்றனர். இந்தக் கோயில் 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது.

Read article
படிமம்:Sripuram_Temple_Multiple_Views.gifபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Golden_Temple,_Vellore,_India.jpgபடிமம்:Sripuram_Temple_Full_View.jpgபடிமம்:Entrance_Golden_Temple,_Sripuram.jpg